வெவ்வேறு விபத்தில் மூன்று பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு விபத்தில் மூன்று பேர் பலி

Added : ஜன 12, 2020

தி.மலை: திருவண்ணாமலை அருகே, மூன்று வெவ்வேறு விபத்தில், மூன்று பேர் பலியாயினர். *திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த, காட்டுமலையனூரை சேர்ந்தவர் சந்தோஷ், 9; தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று, அங்குள்ள கோவிலுக்கு சென்று விட்டு, பகல், 2:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுவன், ஓட்டி வந்த ஹோண்டோ பைக் மோதி படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்கு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து, வேட்டவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


* தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரத்தை சேர்ந்தவர் ராமன், 32; இவரது மாமா கணேசன், 45; குடிப்பழக்கம் உள்ள இருவரும் அதை மறக்க, நேற்று, பீமாரப்பட்டியில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்று பகல், 12:30 மணிக்கு திரும்பினர். தானிப்பாடி செக்போஸ்ட் அருகே, நிலைதடுமாறி அருகிலிருந்த மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில், ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேசன், தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, தானிப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


* வாணாபுரம் அடுத்த மெய்யூரை சேர்ந்த விவசாயி ஏழுமலை, 34; இவர், நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு, திருவண்ணாமலை நோக்கி பஜாஜ் பைக்கில் சென்றார். எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில், படுகாயமடைந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X