பொது செய்தி

தமிழ்நாடு

ரமணரின் 140வது ஜெயந்தி விழா: பக்தர்கள் பங்கேற்பு

Added : ஜன 12, 2020
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ரமணரின், 140வது, ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில், ரமணரின், 140வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று அதிகாலை, 4:00, மணிக்கு மங்கள இசையுடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ருத்ரஜெபம் மற்றும் ரமணர் மஹாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, மங்கள ஆரத்தி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், இசை அமைப்பாளர் இளையராஜா, ரமணர் கீர்த்தனைகளை பாடினார். மாவட்ட கலெக்டர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X