பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் கலெக்டர் உத்தரவை மீறிய அரசு பஸ் டிரைவர்கள் 12 பேர் மீது வழக்கு

Added : ஜன 12, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூரில், கிரீன் சர்க்கிளில் நிறுத்தி பயணிகளை இறக்கிய, 12 அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சத்துவாச்சாரியில் இருந்து, வேலூர், திருப்பத்தூர், காட்பாடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பில், கிரீன் சர்க்கிள் உள்ளது. இங்கு, எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். இதனால், கிரீன் சர்க்கிள் பகுதியில், வாகனங்களை நிறுத்தக்கூடாது என, கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த வாரம் உத்தரவிட்டார். ஆனால், கலெக்டரின் உத்தரவை மீறி, சென்னையில் இருந்து வேலூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் அரசு பஸ்கள், கிரீன் சர்க்கிளில் நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டு வந்தனர். போலீசார் பலமுறை எச்சரித்தும், அரசு பஸ் டிரைவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, நேற்று காலை, 10:00 முதல், 11:00 மணி வரை, கிரீன் சர்க்கிளில் நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்ட, அரசு பஸ் டிரைவர்கள், 12 பேர் மீது, வேலூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X