சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கை, கால் வெட்டிய நிலையில் புதரில் வாலிபர் சடலம் மீட்பு

Added : ஜன 12, 2020
Share
Advertisement

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, கை, கால்கள் வெட்டிய நிலையில், வாலிபர் சடலம் மீட்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த துரையேறியில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் கீழே, செட்டியப்பனூர் செல்லும் சாலை புதர் மறைவில், நேற்று காலை, 9:00 மணிக்கு அழுகிய நிலையில் வாலிபர் சடலம் கிடந்தது. அதை, வாணியம்பாடி போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: வலது கை மற்றும் இடது கால் பாதம் வெட்டப்பட்ட நிலையில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் புதரில் கிடந்தது. மூன்று நாட்களுக்கு முன் இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளது. கொலையான வாலிபர் நீல நிற ஜீன்ஸ், வெள்ளை நிறத்தில் நீலகோடு போட்ட சட்டை அணிந்திருந்தார். முகத்தில் தாடி உள்ளது. கொலையானவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X