பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர், துணைத்தலைவர் தேர்தல்: விருந்து ஏற்பாடு செய்த கட்சியினர்

Added : ஜன 12, 2020
Advertisement

தர்மபுரி: மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு, நேற்று நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், அதிகாரிகள் மற்றும் தொண்டர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 10 யூனியன் தலைவர்கள் மற்றும் இதற்கான துணைத் தலைவர்கள், ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் இதன் துணைத்தலைவர்களுக்கான, மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில் சில யூனியன்களில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சியினர், எதிரணி போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்களை கணிசமாக கவனித்தும், தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்தனர். இதனால், நேற்று நடந்த தேர்தல் போட்டிகள், சில இடங்களில் கண்துடைப்பாக நடந்தது. இப்பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள், தொண்டர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, சிறப்பான மதிய உணவு ஏற்பாடுகளை வெற்றி பெற்றவர்கள் செய்திருந்தனர். சில அதிகாரிகளுக்கு அவர்கள் விரும்பிய, சைவம் மற்றும் அசைவ ஓட்டல்களில், மதிய உணவு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டது. வெற்றியை கொண்டாட வந்த தொண்டர்களுக்கு, அவரவர்கள் கிராமத்தில் சமையல் மாஸ்டர்களை வைத்து, அவர்களுக்கு தேவையான உணவுகளை தயாரித்து பரிமாறினர். இதனால், அதிகாரிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர், மகிழ்ச்சி திளைப்பில் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X