பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை சீரமைக்கும் பணி

Added : ஜன 12, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி, கந்தசாமி வாத்தியார் தெருவில், மந்தகதியில் நடந்து வந்த பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கும் பணி, 'தினமலர்' செய்தி எதிரொலியால், மீண்டும் பணி துவங்கியது.
தர்மபுரி, கந்தசாமி வாத்தியார் தெருவில், ஒரு மாதத்துக்கு முன், பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்க, நகராட்சி ஊழியர்கள் சாலையில் பள்ளம் தோண்டினர். குழாய் மட்டும் சீரமைத்த நிலையில், சாலையில் கொட்டிருந்த மண் மற்றும் ஜல்லிக்கற்களை அள்ளவில்லை. ஒரு மாதத்துக்கு மேலாகியும், சாலை பணியை முழுமை படுத்தப்படவில்லை. இதனால், இச்சாலையில் மண் புழுதி பறந்து, சாலையில் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்தது. இதன் அருகில் கடை வைத்துள்ளவர்கள் மற்றும் ஓட்டல் கடை நடத்துவோர், இந்த மண் புழுதியால் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடைகாரர்களே ஒன்று சேர்ந்து, மண் புழுதி பறக்காதவாறு சாலையில் தண்ணீர் ஊற்றி வந்தனர். இதுகுறித்து கடந்த, 7ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, நேற்று மதியம், 1:00 மணிக்கு இப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர்கள், இங்கிருந்த பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், இப்பகுதி பொதுமக்கள், 'தினமலர்' நாளிதழுக்கும், சீரமைப்பு பணிக்கு நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X