பொது செய்தி

தமிழ்நாடு

கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் அறிவிப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

தர்மபுரி: ''கள் மீதான தடையை நீக்க வேண்டும். வரும், 21ல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டத்தை நடத்த உள்ளோம்,'' என, தர்மபுரியில் கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: கள், தடைசெய்யப்பட வேண்டிய பொருளே இல்லை. கள் இறக்கவும், பருகவும் அரசியல் அமைப்பு சட்டம் அனுமதி அளித்துள்ளது. கள் பானத்தில், கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காரணம் கூறி கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர், எங்கள் கோரிக்கைகளை ஏற்றனர். ஆனால், நடை முறைப்படுத்தவில்லை. தற்போதுள்ள அரசு, பனை, தென்னை, ஈச்ச மரங்களில் இருந்து கிடைக்கும் நீரா பானம், கள், பதநீர் போன்றவற்றை இறக்கிக் கொள்ளும் அனுமதியை வழங்க வேண்டும். கள் மீதான தடையை நீக்க வேண்டும். வரும், 21ல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X