சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொரப்பூர் யூனியன் தலைவர் தேர்தலில் தி.மு.க.,வினர் வன்முறை: போர்க்களமாக மாறியதால் போலீசார் தடியடி

Added : ஜன 12, 2020
Advertisement

மொரப்பூர்: மொரப்பூரில், தேர்தல் நடத்தும் அலுவலரை ஏற்றிச்சென்ற, ஆம்புலன்ஸ் வாகனத்தை, தி.மு.க.,வினர் சேதப்படுத்தியதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள, 10 கவுன்சிலர் இடங்களில், தி.மு.க., 4; பா.ம.க., 3; அ.தி.மு.க., - வி.சி., மற்றும் சுயேச்சை தலா, ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். நேற்று காலை, 11:00 மணிக்கு, மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், குழுத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க., சார்பில், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் மனைவி சுமதி, பா.ம.க., சார்பில், பெருமாள் என்பவரும், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனிடம் மனுத்தாக்கல் செய்தனர். அப்போது, குமரேசனுக்கு மயக்கம் ஏற்பட்டதால், அங்கேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேர்தலை காலதாமதம் செய்வதாக கூறி, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், 11:30 மணிக்கு, அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர். மயக்கமடைந்த தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனை, போலீஸ் பாதுகாப்புடன், ஆம்புலன்ஸ் வாகனத்தில், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, தி.மு.க.,வினர் வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, பக்க கதவை உடைத்து, வாகனத்தின் நான்கு டயர்களிலும் காற்றை பிடுங்கி விட்டு, குமரேசனை தாக்க முயன்றனர். அங்கு வந்த, அரூர் டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன், தி.மு.க.,வினரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த குமரேசனை, போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றபோது, வேனின் குறுக்கே, இரும்பு தகடுகள் மற்றும் பெரிய கற்களை வைத்து, தி.மு.க.,வினர் தடுத்தனர். போலீஸ் மீதும், ஆம்புலன்ஸ் மீதும் கற்களை வீசினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த மோதலால், அப்பகுதி போர்க்களம் போல் மாறியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X