அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர்: பொதுமக்கள் வேண்டுகோள்

Added : ஜன 12, 2020
Advertisement

அரூர்: அரூர் அருகே, அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் பள்ளிக்கு உள்ளே வரும் நபர்கள், மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்வதுடன், சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பள்ளி நேரத்தில், கால்நடைகளும் பள்ளி வளாகத்தில், உலா வருவதால், மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். இதை தடுக்க, பள்ளி வளாகத்தைச் சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி ?பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X