ரூ.10 லட்சம் செலவில் கட்டியும் பயன்பாடின்றி சுகாதார வளாகங்கள்

Added : ஜன 12, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிப்பட்டணம் ஒன்றியம், பேருஅள்ளி முருகர் கோவில் அருகில், தூய்மை பாரத இயக்கம் சார்பில் கடந்த, 2016ல், தலா நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டன. இவற்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவில், சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டும், இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வில்லை. இதனால் சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி, கோவிலுக்கு வரும் பக்தர்களும் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பயன்பாடின்றி உள்ளதால், கடந்த நான்கு ஆண்டுகளாக இக்கட்டடங்கள் சேதமடைந்து வருவதோடு, அரசு பணமும் வீணாகி உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தூய்மையை பிரசாரம் மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம், இந்த சுகாதார வளாகங்களை பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X