பொது செய்தி

இந்தியா

துபாய் விமானநிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (27)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத் : சுமார் 300இந்திய பயணிகள் துபாய் அருகே அல் மக்டோவும் சர்வதேச விமான நிலையத்தில் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக அமெரிக்காவில் இருந்து வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்திய பயணிகள் 300 பேர் 12 மணி நேரம் உணவு. குடிநீர் இன்றி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பிறகு இவர்கள் அனைவருக்கும் ஜன.,14 ம் தேதிக்கு விமான டிக்கெட் புக் செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு வீடு திரும்பிய இவர்கள், தங்களுக்கு முறையாக தகவல் அளிக்காமலும், தங்குவதற்கு இடம் கூட அளிக்காதது தொடர்பாக விமான நிலைய நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகவே கடைசி நேரத்தில் வேறு வழியின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் பயணிகளை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்துள்ளது. துபாயில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ரசல் கைமா விமான நிலையத்தில் கனமழை, வெள்ளத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டதாலும் பயணிகள் 12 மணி நேரம் வரை விமான நிலையத்திலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஜன-202011:33:29 IST Report Abuse
Malick Raja நேற்று 18.01.2020. மாலை 04.40. புறப்பட்ட ஸ்ரீலங்கா விமானம் 45.நிமிடங்களில் திரும்பிவிட்டது (தரை இறக்கப்பட்டுவிட்டது ) இன்று காலை மாற்றுவிமானம் மூலம் பயணிகள் சவுதிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என தகவல் ..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-ஜன-202009:50:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஏர் இந்தியாவில் போனால் இப்படி நடக்கும். எமிரேட்ஸ் விமானத்தில் போனால் துபாயில் பிரியாணிக்கு டோக்கன் தருவார்கள். ஹா.. ஹா..
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜன-202019:58:54 IST Report Abuse
Natarajan Ramanathan .....Sir, I am much interested in travelling and visited many countries including US
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X