இளைஞர்களை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள் : மோடி

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (28)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.





சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோல்கட்டாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மோடி, ஹவுராவில் உள்ள பெலுர் மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பேசினார். அப்போது அவர், துடிப்புமிக்க 100 இந்தியர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என கூறிய சுவாமி விவேகானந்தரை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மாற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஆற்றலும் நமக்குள் இருக்க வேண்டும்.





குடியுரிமை சட்டம், குடியுரிமை தருவதற்கே; பறிப்பதற்கு அல்ல என்பதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத்திற்கு பிறகு மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரிய தலைவர்கள், பாக்.,ல் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் என நம்பினார்கள். அதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் சிலர் அரசியல் விளையாட்டிற்காக அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இளைஞர்களும், மக்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். குடியுரிமை சட்டம் குறித்து புரிந்து கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. சிஏஏ விவகாரத்தில் பாக்.,ன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. சிஏஏ சிறுபான்மையினரை பாதுகாக்கக் கூடியது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.




இதனை தொடர்ந்து நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த கோல்கட்டா துறைமுகத்தின் 150வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் மோடி பேசியதாவது: இந்த துறைமுகம் இனிமேல், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம என அழைக்கப்படும். சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னர், அவர்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது நாட்டிற்கு துரதிர்ஷ்டவசமானது. இந்த துறைமுகம் இந்தியாவின் தொழில்துறை, ஆன்மீக மற்றும் தன்னிறைவை குறிக்கிறது. இதன் 150வது ஆண்டு விழாவை, புதிய இந்தியாவின் சக்திவாய்ந்த அடையாளமாக மாற்றுவது நமது பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
12-ஜன-202018:44:39 IST Report Abuse
Rajas "தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கபோகும் இளைய சமுதாயத்தினர், குடும்ப அரசியலை கருத்தில் கொள்ளமாட்டார்கள். மாறாக நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களைதான் அவர்கள் கவனத்தில் கொள்வார்கள். செயல் வீரர்களைதான் அவர்களுக்கு பிடிக்கும் என்பதால்,தேர்தலுக்காக வெற்று வாக்குறுதிகளை அளித்து இன்றைய இளம் தலைமுறையினரை யாரும் ஏமாற்றிவிட முடியாது. அரசியலுக்காக அரங்கேற்றப்படும் நாடகங்களை கண்டுகொள்ள அவர்கள் தயாராக இல்லை. நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள் எனக் காண்பது மட்டுமே அவர்களின் அக்கறையாக உள்ளது. - இது பிரதமர் மோடி 13 - 01 - 2019 அன்று தமிழக பிஜேபியினர் மத்தியில் வீடியோ கானபிரான்ஸில் சொன்னது.
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
12-ஜன-202022:18:07 IST Report Abuse
Rajasஅப்போது நன்றாக வழி நடந்த இளஞ்சர்கள் இப்போது தவறாக வழி நடத்தப்படுகிறார்களா....
Rate this:
Share this comment
Cancel
fardhikan - lakshmaangudi,இந்தியா
12-ஜன-202017:10:48 IST Report Abuse
fardhikan அடேங்கப்பா அப்போ கல்லூரிகளில் புகுந்து தாக்குதல் நடத்தவிட்டு நான்தான் செய்தென் என்று ஒருத்தன் வீர வசனம் பேசிநானே அவன் மீது இதுவரையிலும் நடவடிக்கையும் எடுக்கபபடவில்லையே அவன் யாரால் வளர்த்து எடுக்கப்பட்டு இது போன்ற எண்ணங்களை புகுத்தியது யார்
Rate this:
Share this comment
Cancel
Karthikeyan - Madurai,இந்தியா
12-ஜன-202017:01:19 IST Report Abuse
Karthikeyan நீங்க..உங்க கட்சி தலைவர்கள் இளைஞர்களை சரியா வழிநடத்துறீங்களா? சொல்லுங்க மிஸ்டர் மோடி சொல்லுங்க ?? பிஜேபி, RSS தலைவர்கள் பேசுவதெல்லாம் என்ன? எதைப்பற்றி? நாட்டின் முன்னேற்றைத்தை பற்றியா? உங்க உடையில் இருக்குற கறையை பாருங்க.. எப்பவும் அடுத்தவர்களை குறை சொல்வதை விட்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X