ஊடுருவல்காரர்களுக்கு குடியுரிமையா? காங்.,க்கு கேள்வி

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
Minister, GirirajSingh, CAA, Rohingyas, Pakistanis, HinduRefugees,  BJP, மத்தியஅமைச்சர், கிரிராஜ்சிங், குடியுரிமைசட்டம், சிஏஏ, பாகிஸ்தான், பாஜ, பாஜக

இந்த செய்தியை கேட்க

புவனேஸ்வர்: பாக்., ஊடுருவல்காரர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமா? என காங்., கட்சிக்கு, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றன. ஆனால், சட்டம் குறித்து தெளிவில்லாமல் மக்களிடம் தவறாக பரப்புவதாக எதிர்கட்சிகள் மீது பாஜ., குற்றம் சாட்டியது. மேலும், பாஜ.,வினர் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தியும், வீடு வீடாக பிரசாரம் செய்தும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடம் விளக்கி வருகின்றனர்.

ஒடிசாவில் நடந்த கூட்டத்தில் மத்திய விலங்குகள் பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பங்கேற்றார்.


latest tamil news


அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் தங்கியுள்ள அனைவரும் 'வந்தே மாதரம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷமிட வேண்டும். ரோஹிங்கியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டுமா? என காங்., மற்றும் துக்டே துக்டே (சிறு சிறு) குழுக்களிடம் கேட்க விரும்புகிறேன். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து வரும் ஹிந்து மற்றும் சீக்கிய அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட வேண்டுமா? அவர்களுக்கு தைரியம் இருந்தால் ஆம் அல்லது இல்லை என பதிலளிக்க வேண்டும்.


latest tamil news


குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பீதியடைய தேவையில்லை. ஆனால் நாட்டிற்குள் ஊடுருவும் நபர்கள் குடியுரிமையை பெற மாட்டார்கள். பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் நடந்த வன்முறையை காங்., முன்னாள் தலைவர் ராகுல் அரசியல் செய்ய முயற்சிக்கிறார். இவ்வாறு கிரிராஜ் சிங் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
13-ஜன-202002:13:09 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் 12 லட்சம் வங்காள இந்துக்களுக்கு அதனால் தான் குடியுரிமை வழங்கவில்லையா?
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
12-ஜன-202022:16:01 IST Report Abuse
svs //...Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்......பொருளாதார மந்தநிலையில் ......//......இந்த விஷயத்தில் நீங்கள் கூறுவது முக்காலும் உண்மை ......காசே இல்லாமல் , ஆயுதம் கூட வாங்க முடியாமல் தீவிரவாதத்தை எப்படி ஒழிப்பது?? .......பல வளர்ச்சி குறியீடுகளில் பங்களாதேஷ் முன் சென்றுகொண்டுள்ளது ....இது அவமானம் ....இந்த CAA என்பதே வாக்கு வங்கியை குறி வைத்து அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் .....இது அசாம் பிரச்னையையும் தீர்க்காது , உச்ச நீதிமன்றம் தலையிடவும் வாய்ப்பு .....இதெல்லாம் தெரிந்து எதற்கு இந்த சட்டம் .....பிரச்னையை வளர்க்கவா ??.....அசாம் பிரச்சனை தீர பல வழிகள் உண்டு .....பொருளாதார வலிமைதான் உண்மையான வலிமை ..... இல்லையென்றால் பிச்சைக்காரர்களாக அன்னியர்க்கு அடிமையாக வேண்டியதுதான் .....
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
12-ஜன-202014:42:11 IST Report Abuse
Rajas வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, மக்களிடம் அதிகரித்து வரும் பொருளாதார பாகுபாடு இவைகளை சரி செய்யாததால் வேறு எங்கோ வேறு விதமாக எதிர்ப்பு வருகிறது. எல்லோருக்கும் வேலை, பொருளாதார வளர்ச்சி என்றால் எவனும் போராட்டம் என்று போக மாட்டான். பிரச்சினையை பிஜேபி புரிந்து கொண்டது போல தெரியவில்லை.
Rate this:
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்)தீவரவாதிக்கு குடியுரிமை கொடுத்தால் இந்த பிரச்சனை தீர்ந்து விடுமா ??? என்னங்கடா உங்க லாஜிக் ???...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-ஜன-202020:54:32 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅப்போ என்ன செஞ்ச இந்த பிரச்னை தீரும்? எங்க லாஜிக் தப்பு….சரியான லாஜிக் பேசும் நீங்கதான் ஒரு நல்ல யோசனை சொல்லுங்களேன்… உங்க நினைவுக்குக்காக உங்க அரசு எடுத்த நடவடிக்கை...1 . ரிசர்வ் வங்கியிடமிருந்து 1 லட்சத்து 70 கோடி வாங்குனது…2 . கார்ப்பரேட்டுகளுக்கு வரி தள்ளுபடி 1 லட்சத்து 40 கோடி….3 பேங்க் இணைப்பு….பொருளாதாரம் சீராயிடுச்சா? உலக பொருளாதாரமே மந்தமா இருக்கு….அது சரியாகிற வரை காத்துட்டு இருக்கணுமா? நிலைமை இனி வரும் காலங்களில் சீராகும்..இப்படியே 9 காலாண்டு சொல்லியாச்சு..அது சரியாவாரத்துக்குள்ளே எத்தனை நிறுவனங்கள் சங்குதானுமோ…? GHI ( global hunger index இணையத்தில் தேடுங்கள் ) என்ன சொல்லுது தெரியுமா? இந்திய index எண் 117 க்கு 103 ....விளக்கமா சுருக்கமா... index குறியீடு ஒற்றை இலக்க எண்னை நோக்கி போனால் அந்த நாட்டில் உள்ள 5 வயதுக்குற்பட்ட குழந்தைகள் ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்துள்ள உணவும் உண்கின்றன என அர்த்தம்.. 117 மிக மோசமான குறியீடு..அதில் நாம் 103 வெக்கபடவேண்டும் நாம்....ஒற்றை இலக்க எண்னை அடைய நாம் எடுக்கவேண்டிய அடி? போடவேண்டிய திட்டங்கள்? ..தீவரவாதிங்களுக்கு குடியுரிமை கொடுத்தால் இந்த பிரச்னை தீர்வா போகுது…? நல்ல கேள்வி.... நாங்க லாஜிக்கில்லாமல் பேசும் ஆட்கள்.எங்களை விடுங்க ..பொருளாதார மந்தநிலையில் ஒரு நாடு அதை மீட்டெடுக்க போராடுமா இல்லை குடியுரிமை சட்டம் கொண்டுவருமா? இந்த லாஜிக் எப்புடி?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X