பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கான்கிரீட் தளம் அமைக்கப்படுமா? குமாரபாளையம், அரசு மருத்துவமனை எதிர் வீதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அரசு உதவி பெறும், சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளியில் தரைத் தளம் மண் தரையாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி குழந்தைகள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மாணவ, மாணவியரின் நலன் கருதி, இந்தப் பள்ளியில் தரைத் தளத்தை கான்கிரீட் தளமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.பன்னீர்செல்வம், குமாரபாளையம்.

வடிகாலை சுத்தம் செய்ய வேண்டும்: பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூர் பகுதி, ஜெ.ஜெ.நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்ல, பிரதான வடிகால் செல்கிறது. இது, பராமரிப்பின்றி உள்ளதால், கழிவுநீர் செல்ல தடைஏற்படுகிறது. பல இடங்களில் தேங்கியுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வடிகாலை பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.சக்திவேல், காடச்சநல்லூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X