பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு: நாமகிரிப்பேட்டையில் சோதனை

Added : ஜன 12, 2020
Advertisement

ராசிபுரம்: பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, நாமகிரிப்பேட்டையில் திடீர் சோதனை நடந்தது.
தமிழகத்தில், பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமகிரிப்பேட்டை பகுதியில், ஆத்தூர் பிரதான சாலை, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை, ஓட்டல், மளிகை கடைகள், பேக்கரி என, 60க்கும் மேற்பட்ட கடைகளில் செயல் அலுவலர் திருநாவுகரசு, துப்புரவு ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையின்போது, 18 கிலோ கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 3,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 'கேரி பேக்குகளை பயன்படுத்தும் கடைகளுக்கு, அபராதம் விதிப்பதுடன், கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருநாவுக்கரசு எச்சரிக்கை விடுத்தார்.


* ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடை, பேக்கரி, ஓட்டல், மளிகைக்கடை, வர்த்தக நிறுவன உரிமையாளர்களை அழைத்து பலமுறை கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான கடைகள், பேக்கரி, வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து கொண்டே உள்ளது. இந்நிலையில், காவேரி, ஆயக்காட்டூர், கீழ்காலனி மற்றும் பல பகுதியிலுள்ள கடைகள், ஓட்டல், பேக்கரி, வர்த்தக நிறுவனங்களில் செயல் அலுவலர் சண்முகம் ஆய்வு செய்து, பயன்பாட்டுக்கு பதுங்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர், கப், பைகளை பறிமுதல் செய்தார். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X