பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல்: அ.தி.மு.க.,வினர் போட்டியின்றி தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement

நாமக்கல்: மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத் தலைவராக, அ.தி.மு.க.,வினர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 172 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 332 ஊராட்சி தலைவர்கள், 2,595 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என, மொத்தம், 3,106 பதவிகளுக்கு, 9,930 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். ஓட்டு எண்ணிக்கை, கடந்த, 2ல் நடந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவியில், 17ல், 13 வார்டுகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது. மீதமுள்ள, மூன்று வார்டுகளில், தி.மு.க., வெற்றி பெற்றது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிக்கு, மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. கலெக்டர் மெகராஜ் முன்னிலையில், தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., மாநில அமைப்பு செயலாளர் ராஜூவின் மனைவி சாரதா, வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக வெற்றிபெற்றதாக, தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மெகராஜ் அறிவித்தார். அதையடுத்து, மாலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில், முன்னாள் எம்.பி., சுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். இருவருக்கும், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X