பொது செய்தி

தமிழ்நாடு

காதி - கிராப்ட் அங்காடியில் பொங்கல் சிறப்பு விற்பனை துவக்கம்

Added : ஜன 12, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல், காதி கிராப்ட் அங்காடியில் பொங்கல் சிறப்பு விற்பனை துவக்கப்பட்டது.
நாமக்கல், பஸ் ஸ்டாண்ட் அருகே காதி கிராப்ட் கதர் விற்பனை அங்காடி புதுப்பிக்கப்பட்டு, மெருகூட்டப்பட்ட விற்பனை நிலையத்தில் பொங்கல் சிறப்பு விற்பனை துவக்கப்பட்டது. கலெக்டர் மெகராஜ் விற்பனையை துவக்கி வைத்து கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் நலன் கருதி கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு, 30 சதவீதம், கம்பளி ரகங்களுக்கு, 20 சதவீதம் மத்திய, மாநில அரசுகளால் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு எளிய கடன் வசதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் காதி கிராப்ட் கதர் விற்பனை நிலையத்திற்கு, 80 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை, 67 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். திருச்சி, கதர் கிராமத் தொழில்கள் மண்டலத்துணை இயக்குனர் மணிவாசகன், கரூர் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குனர் பாலகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X