பொது செய்தி

தமிழ்நாடு

சுயேச்சை உறுப்பினருக்கு அடித்தது 'ஜாக்பாட்': மல்லை ஒன்றியக்குழு தலைவராக தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement

நாமக்கல்: மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு தலைவர் பதவியில், அ.தி.மு.க., உறுப்பினர்கள் உதவியுடன், சுயே., உறுப்பினர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டியிட்டனர். கடந்த, 2ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில், அ.தி.மு.க, 10, தி.மு.க., மூன்றில் வெற்றி பெற்றது. பரமத்தி ஒன்றியத்தில், எட்டு வார்டுகளில், அ,தி.மு.க., 4, தி.மு.க. 4 என, சரி பாதி வார்டுகளில் வெற்றி பெற்றது. அதேபோல், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில், ஒன்பது வார்டுகளில், அ.தி.மு.க., 4, தி.மு.க., 4 வார்டுகளை கைப்பற்றின. ஒரு வார்டில், சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அதனால், இந்த ஒன்றியத்தில், சுயே., உறுப்பினர் ஆதரவு கிடைக்கும் கட்சியே, ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது. ஒன்பதாவது வார்டில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மோகனும், அவரை எதிர்த்து, முன்னாள் கிளை செயலாளர் விஜயன் மனைவி அலமேலு, சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். அதில், அலமேலு வெற்றி பெற்றார். நேற்று நடந்த தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில், அ.தி.மு.க., உறுப்பினர்கள் ஆதரவுடன், ஒன்றியக்குழுத் தலைவராக அலமேலு தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் போட்டியிட, ஒன்றிய செயலாளர் மோகன் சீட் தராததால், அவரை எதிர்த்து தன் மனைவியை சுயேச்சையாக போட்டியிட வைத்து விஜயன் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X