பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜன 12, 2020
Advertisement

விஷப்பூச்சிகளால் மக்கள் அச்சம்: மல்லசமுத்திரம் அடுத்த, சத்யாநகர் பஸ்நிறுத்தத்தில் இருந்து, ஊருக்குள் செல்லும் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு, சாலையின் இரு புறங்களிலும் அதிகளவில் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. முட்புதர்கள் விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக உருவாகியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இப்பகுதியில் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, 'முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்' என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை கொட்ட தடை தேவை: குமாரபாளையம், தம்மண்ணன் சாலையில் அதிக குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் கோவில்கள் உள்ளன. இங்கு, நடன விநாயகர் கோவில் மண்டபம் செல்லும் வீதி நுழைவுப்பகுதியில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. சாலையில் திரியும் ஆடுகள், நாய்கள் இந்த அவற்றை உண்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே இந்த இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைக்க, நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

சாலையில் கழிவுநீர் தேக்கம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திபள்ளியில், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையின் நடுவே செல்கிறது. அருகில் அரசுப் பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தொற்றுநோய் பரவக்கூடும் என்பதால், பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். எனவே, கழிவுநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா? எலச்சிபாளையம் ஒன்றியம், புள்ளாகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தத்தில் தினமும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த எண்ணற்ற பொதுமக்கள், மாணவர்கள் திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கும், வேலை செய்யும் இடங்களுக்கும் சென்று வருகின்றனர். நீண்டநேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இருக்கைகளுடன் கூடிய நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையோரம் முட்புதர்: பள்ளிபாளையம் ஒன்றியம், சமயசங்கிலி தடுப்பணை பாலத்திற்கு செல்லும் சாலையில், முட்புதர் வளர்ந்துள்ளது. இது, விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவிட்டது. மேலும், சாலையில் உலா வருவதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் மக்களும் அச்சமடைகின்றனர். சாலையும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, முட்புதரை அகற்றிவிட்டு, பராமாரிப்பு செய்து, இங்கு மரக்கன்றுகள் நடவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X