சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுவில் விஷம் கலந்த சம்பவம்: மேலும் ஒருவர் உயிரிழப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, கபிலர்மலை அடுத்த இருக்கூரை சேர்ந்தவர்கள் தியாகராஜன், 35, செந்தில்குமார், 40, விவசாயிகள். அதேபோல் இருக்கூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளரான சரவணன், 44, சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம், 52. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சத்யா, தி.மு.க.,வை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜாமணி ஆகியோர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், தன் மனைவியை ஊராட்சி மன்ற துணைத்தலைவராக்க வேண்டுமென நினைத்த ஆறுமுகம், செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த, 30ல் செந்தில்குமார் மற்றும் தியாகராஜனுக்கு, மதுவில் விஷம் கலந்து ஆறுமுகம் கொடுத்துள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். செந்தில்குமார் சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தியாகராஜன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் இரட்டை கொலை வழக்காக பதிவு செய்தனர். தியாகராஜனுக்கு, விஷ்ணுப்பிரியா என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதே ஆன பெண்குழந்தையும் உள்ளனர். இந்த வழக்கில், ஆறுமுகமும், அவருக்கு உதவியதாக சரவணனும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X