பொது செய்தி

தமிழ்நாடு

மாங்காய் வரத்து துவக்கம்: கிலோ ரூ.90க்கு விற்பனை

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கரூர்: தை மாதம் துவங்க உள்ள நிலையில், கல்லா மாங்காய் வரத்து துவங்கியுள்ளது. தமிழகத்தில் மாங்காய் சீசன், மார்ச் முதல் ஜூலை மாதம் வரை இருக்கும். முன்னதாக, தை மாதம் முதல், கிளி மூக்கு என அழைக்கப்படும், கல்லா மாங்காய் விற்பனைக்கு வர துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து, கல்லா மாங்காய் கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட்டுக்கு வர துவங்கியுள்ளது. முதல் தர மாங்காய் கிலோ, 90 ரூபாய் வரை, இரண்டாம் தர மாங்காய், 60 முதல், 70 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதுகுறித்து, உழவர் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: கல்லா மாங்காய் ஊறுகாய் மற்றும் ஏற்றுமதி தேவைக்காக விற்பனை செய்யப்படும். தற்போது, சீசன் துவங்கியுள்ளதால், 90 ரூபாய் வரை விற்கிறது. மார்ச் மாதத்தில் மற்ற மாங்காய் வகைகள் விற்பனைக்கு வரும். அப்போது, கல்லா மாங்காய் விலை குறையும். குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில் கல்லா மாங்காய், கிலோ, 20 ரூபாய் அளவுக்கு விலை குறைந்து விடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X