பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி - குண்டாறு நதி இணைப்பு: முதற்கட்ட ஆய்வுப்பணி

Added : ஜன 12, 2020
Share
Advertisement

குளித்தலை: காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புக்கான, முதற்கட்ட ஆய்வுப் பணி நடந்தது. 'கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆறு கதவணையிலிருந்து, விருதுநகர் குண்டாறு வரை நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம், காவிரி ஆற்றில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீர், காவிரி மற்றும் பாசன வாய்க்கால் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை வழியாக குண்டாறு வரை கொண்டு செல்லப்படுகிறது. இந்த நதிகள் இணைப்புக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை, திருச்சி பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் காமேஸ்வரி, பூங்குன்றன், ஸ்ரீதர், நிலா, ஜெயப்பிரபா, வெங்கடேஷ், செந்தில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய, 10 பேர் கொண்ட குழுவினர், குளித்தலை அடுத்த, பிள்ளாபாளையம் தாளியாம்பட்டி, அய்யர்மலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்டனர். துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X