பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 12, 2020
Advertisement

கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படுமா? கிருஷ்ணராயபுரம் பஞ்., யூனியன் அலுவலகம் அருகில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதி யில், அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கழிவுநீர் வாய்க்காலில், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண்மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படும். வாய்க்காலை தூர்வார வேண்டும்.
மலைபோல் குப்பை குவிப்பு: கரூர் அருகே புலியூர் சாலையில், டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. ஆனால், அதில், பார் வசதி இல்லாததால், குடிமகன்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அப்போது, பிளாஸ்டிக் டம்ளர்கள், காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், பலமாக காற்று வீசும்போது, குப்பை பறக்கிறது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குப்பையை அகற்றி, திறந்தவெளியில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண் குவியலை அகற்ற வேண்டும்: கரூர்-திருச்சி நெடுஞ்சாலை காந்தி கிராமம் வழியாக நாள்தோறும், ஏராளமான பஸ், லாரிகள் செல்கின்றன. இதுனால், காற்றில் பறக்கும் மணல் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப் படுகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, டூவீலர்களில் செல்கிறவர்கள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். இதனால், காந்திகிராமம் பகுதியில் தேங்கிய மணலை அப்புறப்படுத்த வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.

புதிய சாலை அமைக்கணும்! கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அந்த பகுதியில் சாலைகள், பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், பொதுமக்களால் நடந்து செல்ல முடியவில்லை. டூவீலர் உள்ளிட்ட வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், விரைவாக தார்ச்சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதமடைந்த சின்டெக்ஸ் தொட்டி: கரூர் அருகே, வெங்கமேடு சாலை பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. குழாய்களும் உடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மழையால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X