பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய பூலாவலசு சேவல்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் தீவிரம்

Added : ஜன 12, 2020
Advertisement

அரவக்குறிச்சி: பூலாம்வலசு கிராமத்தில், பொங்கல் பண்டிகைக்கு சேவல் சண்டை போட்டி நடத்த, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அரவக்குறிச்சி அருகே, பூலாம்வலசு கிராமம் உள்ளது. இங்கு, பொதுமக்கள் சார்பில் தை, 1 முதல், 3 வரை, அரசின் அனுமதி பெற்று சேவல் சண்டைபோட்டி நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்தப்போட்டி, 100ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த சேவல் சண்டை போட்டிக்காக, சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், தனி கவனத்துடன் சண்டை சேவல்கள் வளர்த்து வருகின்றனர். இதுபோல், மாநிலத்தின் பல பகுதிகளில் சேவல் பிரியர்களால் வளர்க்கப்படும் சண்டை சேவலுடன் போட்டிக்காக தைமாதம் முதல் தேதியில் பூலாம்வலசு வருவது தொடர்ந்து வந்தது. இந்நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பில், இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகைக்கு, சேவல் சண்டை போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம மக்கள் முனைப்புடன் செய்துவருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த ராமசாமி கூறியதாவது: பூலாம்வலசு சேவல் சண்டை போட்டியில் கலந்து கொள்ள, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் தாங்கள் வளர்க்கும் சண்டை சேவல்களுடன் வந்து போட்டியில் கலந்து கொள்வர். இத்தகைய நிகழ்வு நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதனால், பொங்கல் பண்டிகையன்று எங்கள் பகுதி விழாக்கோலமாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X