தரமற்ற உணவுப் பொருள் பள்ளியில் விற்பனை: மாவட்ட கலெக்டரிடம் பெற்றோர் புகார்

Added : ஜன 12, 2020
Advertisement

குளித்தலை: குளித்தலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அனுமதியின்றி தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
குளித்தலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, ஆசிரியர்கள் நடத்தும் அனுமதியில்லாத கடையில், தரமில்லாத உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக, தலைமை ஆசிரியரிடம், பெற்றோர் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் ஆறுமுகம் கூறுகையில், ''பள்ளியில் ஜெராக்ஸ், ஸ்டேஷனரி, மாணவர்களுக்கு தேவையான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, கேன்டீன் செயல்படவில்லை,'' என்றார். குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அரசு அனுமதியின்றி தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா கூறியதாவது: ஏற்கனவே வெளியிலிருந்து மதிய உணவு இடைவேளையில் உணவுப் பொட்டலங்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. அவை தரமற்றவை என, தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது, பள்ளி காவலர் ஒருவரால் இந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் கபீர் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஸ்டேஷனரி கடைகளும், தின்பண்ட கடைகளும் நடத்திக் கொள்ள யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது, பொதுமக்கள் சார்பில் புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X