பொது செய்தி

தமிழ்நாடு

முதல் முறையாக உச்சம் தொட்ட மல்லிகை பூ: சத்தியில் கிலோ ரூ.4,200க்கு விற்பனை

Added : ஜன 12, 2020
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பூமார்க்கெட் வரலாற்றில், முதல் முறையாக உச்சம் தொட்ட மல்லிகை பூ கிலோ, 4,200 ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்துள்ள சிக்கரசம்பாளையம், புதுக்குய்யனூர் உள்ளிட்ட, 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை, முல்லைப்பூ சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூமார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து, பல்வேறு நகரங்கள் மற்றும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான, பனிபொழிவு காரணமாக, பூக்கள் வரத்து குறைந்த போதும், மல்லிகை பூவிற்கு உரிய விலை கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து பெருமளவு குறைந்தால், பூக்களின் விலை அதிகரிக்க துவங்கியது. இதுவரை மல்லிகை பூ கிலோ அதிகபட்சமாக, 3,850 ரூபாயக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது. நேற்று மல்லிகை பூ கிலோ, 4,200 ரூபாய்க்கு விற்பனையாகி, வரலாற்றிலேயே முதல் முறையாக உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக மல்லிகை, 4,200 ரூபாய்க்கும், முல்லை,1,640, காக்கடா, 1,150 , கனகாம்பரம்,410, ஜாதிமல்லி,650, செண்டுமல்லி,60, பட்டு,90, சம்பங்கி,40 ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X