பொது செய்தி

தமிழ்நாடு

10 கோடி முட்டைகள் தேக்கம்: கொள்முதல் விலை குறைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

நாமக்கல்: பொங்கல் பண்டிகை காரணமாக, பண்ணைகளில், 10 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதன் காரணமாக, கொள்முதல் விலை, இரண்டு நாட்களில், 38 காசு குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த, 1ல், கொள்முதல் விலை, 448 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, 2ல், 5 காசு அதிகரித்து, 453; 3ல், 10 காசு குறைக்கப்பட்டு, 443, 5ல், 15 காசு சரிந்து, 428 என, அதிரடியாக குறைக்கப்பட்டது. அதையடுத்து, 7ல், 3 காசு உயர்ந்து, 431; 8ல், 2 காசு அதிகரித்து, 433 என அதிகரித்தது. இந்நிலையில், கடந்த, 10ல், 23 காசு குறைக்கப்பட்டு, 410, நேற்று, 15 காசு சரிந்து, 395 காசாகவும் வீழ்ச்சியடைந்தது. இரண்டு நாட்களில், 38 காசு குறைந்துள்ளது, பண்ணையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையும், கேரளாவில், ஐயப்பன் கோவில் சீசன் காரணமாகவும், நுகர்வு வெகுவாக சரிந்துள்ளது. அதன் காரணமாக, மூன்று நாட்களில், பண்ணைகளில், 10 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அவற்றை கருத்தில் கொண்டும், மேலும், தேக்கமடைவதை தவிர்க்கவும், முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின், கொள்முதல் விலை அதிகரிக்கும். அப்போது, பண்ணைகளில் தேக்கமடைந்துள்ள முட்டைகளும் விற்பனையாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X