சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசவம் முடிந்து தனியார் பள்ளி ஆசிரியை இறப்பு: தவறான சிகிச்சை காரணம் என உறவினர் முற்றுகை

Added : ஜன 12, 2020
Advertisement

நாமக்கல்: பிரசவம் முடிந்த பின், தனியார் பள்ளி ஆசிரியயை இறந்ததார், தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக கூறி உறவினர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
நாமக்கல் மாவட்டம், தூசூர் அடுத்த சம்பாமேட்டை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஜனகர், 39. அவரது மனைவி ரேவதி, 33; தனியார் பள்ளி ஆசிரியை. தம்பதியருக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக, ரேவதி கர்ப்பம் தரித்தார். கடந்த, 9ல், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு போதிய வசதி இல்லாததால், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று முன்தினம், அறுவை சிகிச்சை மூலம், மூன்று கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், அன்று இரவு, அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இரவு, 10:00 மணிக்கு, மயக்க நிலைக்கு சென்றவர், திடீரென இறந்தார். அவரது உறவினர்கள், நேற்று அதிகாலை முதல், மருத்துமனையில் குவிந்தனர். மேலும், 'ரேவதி இறப்புக்கு, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்தான் காரணம்' எனக்கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டனர். நாமக்கல் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து, தன் மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஜனகர் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X