ஈரானில் தூதர் கைது: பிரிட்டன் கண்டனம்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (10)
Advertisement
Iran, britain, england, envoy, arrest, Presidenttrump, trump, 
 arrest, ukrain, plane, ஈரான், உக்ரைன்விமானம், உக்ரைன், பிரிட்டன், இங்கிலாந்து, தூதர், கைது, டிரம்ப், டொனால்ட்டிரம்ப், அதிபர்டிரம்ப்,

இந்த செய்தியை கேட்க

லண்டன்: ஈரானில், உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டார். இதற்கு பிரிட்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


ஒப்புதல்


ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 176 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் நொறுங்கியதாக முதலில் தகவல் வெளியான நிலையில், அந்த விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஒப்பு கொண்டது. பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே விமானம் பறந்த போது, தவறுகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விளக்கமளித்தது.






போராட்டம்


ஆனால் பறிபோன உயிர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மன்னிப்பு மட்டும் போதுமா எனக்கேட்டு, ஈரானுக்கு எதிராகவும், ஈரான் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. டெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ஈரானில் உள்ள அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகே நடந்த போராட்டத்தில் பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் கலந்து கொண்டார். இதனையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர், பிரிட்டனர் தூதரை கைது செய்து, சில மணி நேரங்களில் விடுவித்தது. போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை தடுப்பு காவலில் கைது செய்ததாக ஈரான் கூறியது.


விதிமீறல்


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, டெஹ்ரானில், எங்கள் தூதரை கைது செய்ததற்கு எந்த ஒரு விளக்கமும் கொடுக்காதது சர்வதேச விதிகளை மீறிய செயல் என தெரிவித்துள்ளது.


டிரம்ப் ஆதரவு





ஈரானில் நடக்கும் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''உங்கள் போராட்டங்களை நெருக்கமாக பார்த்து வருகிறோம். உங்கள் தைரியத்தினால் உத்வேகம் பெற்றுள்ளோம்'' எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
12-ஜன-202020:02:05 IST Report Abuse
Sundar Arrest is justified. He should not participate.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஜன-202016:10:58 IST Report Abuse
dandy பரிதாபம் பாரீர் ...பயணிகள் விமானத்தை கூட கண்டு பயப்படும் நிலையில் ..பாவிக்கும் உபகரணங்கள் ,,ஆயுதம் எல்லாம் யூதர்களின் கண்டு பிடிப்பு ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஜன-202015:43:16 IST Report Abuse
dandy ஒடடக மூளை பிறவிகளுக்கு சர்வதேச நடைமுறை விளங்காது .....ஒரு தூதுவரை ..நாட்டிடை விட்டு வெளியே செல்லுமாறு சொல்ல மாத்திரம் முடியும் . காலம் கடந்து வேஷ்ட்டி உருவப்பட்டதும் உண்மையை சொல்ல முல்லா ..விமானம் சுட்ட அதிகாரிகள் மற்றும் இது சம்பந்தமாக கூவிய அதிகாரிகள் யாவரையும் விமானத்தில் ஏற்றி ...பறந்ததும் சுட வேண்டும் ..கண்ணனுக்கு கண் இது தன ஒடடக மார்க்கத்தின் தீர்ப்பு ..பொய் சொல்லுவதை இந்த ஒடடக மதம் அங்கீகரித்துள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X