பொது செய்தி

இந்தியா

ஓமன் சுல்தான் மறைவு: இந்தியா துக்கம்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஓமன்சுல்தான், துக்கம், உள்துறைஅமைச்சகம், உள்துறை, இந்தியா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஓமன் நாட்டு சுல்தான், குவாபூஸ் பின் சையது, காலமானதையடுத்து, இந்தியாவில்நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமனில், 1970ம் ஆண்டு முதல், சுல்தான் குவாபூஸ் பின் சையது(79) ஆட்சி புரிந்து வந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று(ஜன.,11) காலமானார். ஓமன் சுல்தான் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதனை தொடர்ந்து ஓமன் நாட்டு சுல்தான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு சார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நாளை நடக்காது எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
18-ஜன-202014:42:57 IST Report Abuse
oce எந்த பாயாவது தமிழகத்தில் பெருந்தலைவர்கள் காலமானதற்கு கண்ணீர் அஞ்லி செலுத்தி உள்ளார்களா. சொல்லுங்கள் செந்தில் குமார்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
18-ஜன-202014:40:09 IST Report Abuse
oce கண்ணியவான்
Rate this:
Cancel
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
13-ஜன-202010:36:23 IST Report Abuse
A.SENTHILKUMAR வளைகுடா நாடுகளின் சமாதான தூதுவர் His Majesty Sulthan Qaboos Al bin said அவர்களின் மறைவு ஓமானுக்கு மாபெரும் இழப்பு. தான் இறந்த பிறகு தன்னை சந்தன பேழையிலோ அல்லது வேறு எந்த பெட்டியிலோ வைத்து புதைக்கவேண்டாம், சாதாரணமாக குழியில் வைத்து மண்ணிட்டு மூடுங்களென்று இறப்பதற்கு முன்பே எழுதிவைத்து இறைத்த மாமனிதரின் புகழ் இந்த வையம் உள்ளவரை நிலைக்கும். கண்ணீர் அஞ்சலி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X