முஸ்லிம் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்டமுடியுமா? அமித்ஷா சவால்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (37)
Advertisement
AmitShah, CAA, Support, Unveils, 5LakhLetters, Modi, PM, BJP, Mamata, Kejriwal, அமித்ஷா, குடியுரிமைசட்டம், சிஏஏ, ஆதரவு, கடிதம், மோடி, பிரதமர், பாஜ, பாஜக, மம்தா, கெஜ்ரிவால்,

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத்: இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்ட முடியுமா என மேற்குவங்க முதல்வர் மம்தா, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால்விடுத்துள்ளார்.






குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆமதாபாத்தில் வசிப்பவர்களால் எழுதப்பட்ட 5 லட்சம் கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: வார்த்தைக்காக மட்டுமல்லாமல் இதயத்தில் இருந்து எழுதப்பட்ட நன்றி கடிதங்கள் இவை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பரப்படும் பொய்களுக்கான பதில் தான் இந்த பொதுக்கூட்டம்.




ராஜஸ்தானில் காங்., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுதியளித்தது. நீங்கள் அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அதை ஏன் எதிர்க்கிறீர்கள்? இது பற்றி 2006 மற்றும் 2009ம் ஆண்டுகளில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதினார். அதில், ஹிந்துக்கள், சீக்கியர்களை மட்டும் குறிப்பிட்டபோதும், நாங்கள் அதனுடன், பார்சிகள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் கீழ் உள்ளடக்கியுள்ளோம்.




குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மோடி, லட்சக்கணக்கான மக்களுக்கு மனித உரிமைகளை வழங்கியுள்ளார். இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்ட முடியுமா என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன். தங்கள் மதம் மற்றும் சுயமரியாதையை காப்பாற்ற பாக்., வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்தியா வருகின்றனர். அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்?




நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் உள்துறை அமைச்சர், முதல் ஜனாதிபதி, மகாத்மா காந்தி என அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு யார் வந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என கூறியிருந்தனர். பாகிஸ்தானில் இருந்து வரும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்கள் வேறு எங்கும் செல்ல முடியாது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
12-ஜன-202023:41:59 IST Report Abuse
Aarkay எந்த ஓநாய்களின் சலசலப்பிற்கும் அஞ்சாமல், முன்வைத்த காலை பின்வாங்காமல், CAA-வை செயல்படுத்துங்கள். தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இங்கு இடமில்லை
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
12-ஜன-202023:36:26 IST Report Abuse
Aarkay உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும் ஆனாலும், கலகம் செய்ய கிடைத்த வாய்ப்பை வீணாக்கக்கூடாது என்றும், நாட்டை கொள்ளையடித்து சேர்த்த ஹவாலா இன்வெஸ்ட்மென்ட் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மையினரின் ஒட்டுப்பிச்சைக்காகவும், மேலிடத்து கட்டளைப்படியும், கூலிக்கு மாரடிக்கிறார்கள். தீவிரவாதத்திற்கு குடியுரிமை வழங்கத்துடிக்கும் தேசத்துரோகிகள் யார் என்று மக்கள் அடையாளம் கண்டு, அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்டினாலே போதும் Let's wait and watch
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-202020:00:07 IST Report Abuse
ஆப்பு முதல்ல உங்க தாத்தாவோட பிறப்பு சான்றிதழைக் காட்டுங்க
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13-ஜன-202002:12:37 IST Report Abuse
uthappaஉன் குடியுரிமைக்கு உன் பிறப்பு சான்றே போதும் எதற்கு உன் தாத்தா பிறப்பு சான்று? இந்தியாவில் பிறந்த உனக்கு உரிமை உண்டு என்று கூட தெரியாமல் இருப்பது உன் மத வெறி மட்டுமே....
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
13-ஜன-202006:12:40 IST Report Abuse
blocked userஒங்க தாத்தா முகவின் பிறப்பு சான்றிதழையும் காட்டிவிடவும். அப்படியே முடிந்தால் அந்த மூலப்பத்திரத்தையும் காட்டவும்......
Rate this:
Share this comment
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
13-ஜன-202007:38:48 IST Report Abuse
 N.Purushothamanபைத்தியக்காரத்தனமா இருக்கு ஆப்போட கேள்வி ....ஒருவர் ஒரு நாட்டில் பிறந்தாலே பிறப்பாலேயே அவர் அந்நாட்டு குடிமகன் எனப்படுவர் என்று சட்டம் தெளிவாக கூறி உள்ளது ...இது கூட தெரியாமல் தாத்தாவோட சான்றிதழை கொடு ,பாட்டியோட கொடுன்னு மொக்கை கேள்வி கேட்டுகிட்டு இருக்காய்ங்க ...அது சரி CAA க்கும் உம்ம கேள்விக்கும் என்ன சம்மந்தம் ?...
Rate this:
Share this comment
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-ஜன-202008:27:30 IST Report Abuse
elakkumananசொந்தமா பெயரில்லாத நண்பரே, உங்கள் மோடி எதிர்ப்பு கொண்டை வெளியில் தெரிகிறது. கருப்பு சிவப்பு கரை வேட்டி தெரிகிறது...1980 க்கு முன்னாள் பிறந்தவர்களுக்கு, பிறப்பு சான்றிதழ் இல்லாமல், பாஸ்போர்ட் கொடுக்கப்படுகிறது....உண்மையை பகிருங்கள்.இது ஒரு சமூக ஊடகம்.கழிவறை சுவற்றில் எழுதுங்கள் உங்கள் பொய்களை....பொது வெளியில் உண்மையை பகிருங்கள். திருட்டு முட்டுசந்து கட்சியினால், மக்களிடம் , பொய், கயமை, துரோகம், ஏமாற்றுதல் குறித்த பயம் போய்விட்டது. சொரியாரின் சீரிய பனியின் விளைவு...கழிவின் கழிவு திருட்டு முட்டு சந்து கட்சி. அதுக்கு இன்னும் ஒரு கூட்டம் ஒட்டு விக்குது ... தமிழினம் ஒட்டு விற்பனையில் மூத்த முன்னோடி........வழிகாட்டி ................எமது திருக்குவளை தீய சக்தி......
Rate this:
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
13-ஜன-202010:08:08 IST Report Abuse
Prabu.KTKஹா ஹா நல்ல சவுக்கடி ஆப்புவுக்கு. நல்ல ஆப்பு ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
13-ஜன-202010:10:27 IST Report Abuse
Prabu.KTKசொந்தமா பெயர் இல்லாதவனுங்க குல்லா போட்ட தீவிரவாதீங்க ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X