பொது செய்தி

இந்தியா

விருது பெற்ற போலீஸ் பயங்கரவாதிகளுடன் கைது

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (14)
Advertisement
kashmir, police, terrorist, arrest, hizbul, jammu,  காஷ்மீர், பயங்கரவாதி,  போலீஸ், ஜனாதிபதிவிருது,

இந்த செய்தியை கேட்க

ஸ்ரீநகர் : ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பயங்கரவாதிகளுடன் டில்லிக்கு சென்ற போது கைது செய்யப்பட்டார்.

காஷ்மீர் மாநில போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில் உள்ள தேவிந்தர் சிங் என்பவர், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இவர் வீரதீர செயல்களுக்காக கடந்த ஆகஸ்ட் 15 ல் சுதந்திர தினத்தன்று நடந்த விழாவில் ஜனாதிபதி விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில், தேவிந்தர் சிங், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளான நவீத் பாபு உள்ளிட்ட இரண்டு பயங்கரவாதிகளுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குல்காம் மாவட்டம் வன்போ என்ற இடத்தில் நடந்த வாகன சோதனையின் போது, மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பின்னர், அங்கு 11 வெளிமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதில், இந்த நவீத் பாபுவுக்கு முக்கிய பங்கு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நவீத் பாபுவின் மொபைல் மூலம் அவரது நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வந்தனர். இதன்படி வன்போ என்ற இடத்தில் வந்த வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது, நவீத் பாபுவுடன், தேவிந்தர் சிங்கும் வாகனத்தில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் டில்லி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரின் பல இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மறைக்க வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவிந்தர் சிங் வசித்து வந்த வீட்டிலும், ஆயுதங்கள் சிக்கியது. அவர்கள் டில்லிக்கு சென்றது ஏன் என விசாரணை நடந்து வருகிறது. தேவிந்தர் சிங் இன்று பணிக்கு வராததும், நாளை முதல் 4 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜன-202011:37:33 IST Report Abuse
Lion Drsekar விருது பெற்றதினால் தெரியவந்துள்ளது ...? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
13-ஜன-202008:57:00 IST Report Abuse
Krishna If Society is Projected as Bad & Criminal (its Police Propaganda for Vested Criminal Case Hungriness), then Police & Courts are also Bad & Criminal. Where are Kangaroo Court Encounter Terrosrists. Encounter Him.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-202003:39:01 IST Report Abuse
J.V. Iyer மூளையை மழுக்கச்செய்பவர்கள் இந்த தீவிரவாதிகளும், இடதுசாரிக் கூட்டங்களும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X