நாட்டை தலிபான் பாணியில் இயக்க முடியாது: சஞ்சய் ராவத்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (32)
Advertisement
SanjayRaut, DeepikaPadukone, Chhapaak, TalibaniStyle, ShivSena, சஞ்சய்ராவத், தீபிகாபடுகோனே, சபாக், தலிபான்பாணி, தலிபான், சிவசேனா,

இந்த செய்தியை கேட்க

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மாணவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டதால் அவரின் படத்தை புறக்கணிப்பது தவறு என்றும், நாட்டை தாலிபன் பாணியில் இயக்க முடியாது என்றும் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.





கடந்த வாரம் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., வளாகத்திற்கு நுழைந்த முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், மாணவர்களின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்கத்தலைவி அய்ஷ் கோஷ் உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சில பேராசிரியர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே மாணவர்களுடன் சேர்ந்து போராடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் தீபிகா நடித்த 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும், அவருக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு, டுவிட்டரில் டிரண்டிங்கும் செய்தனர்.





இது குறித்து சிவசேனா எம்.பி.,யும் அதன் சாம்னா பத்திரிகையின் ஆசிரியருமான சஞ்சய் ராவத் கூறுகையில், போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தீபிகா நடித்த 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்ட பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட முக்கியமான படத்தை புறக்கணிக்க வேண்டும் என சொல்வது மிகவும் தவறு. நாட்டை தலிபான் பாணியில் இயக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
13-ஜன-202014:39:20 IST Report Abuse
Anand சிவசேனாவை ஒழிப்பதற்கு தாங்கள் எடுத்துள்ள முயற்சிகள் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-202013:51:56 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எப்படி இருந்த சிவசேனா இப்படி ஆகிவிட்டது , கூடா நட்பு , சோனியா சேனா என்று கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-ஜன-202009:51:30 IST Report Abuse
வல்வில் ஓரி ஒரு மாதம் முன்னாடிதான் சிவசேனா ஒரு வட இந்திய மாணவரை வலுக்கட்டாயமா மொட்டையடித்து புருவத்தை மழித்தானுங்க ஸயன் கோலிவாடாவில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X