அதிருப்தியில் சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள்: பாஜ., எம்.பி.,| Dinamalar

அதிருப்தியில் சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள்: பாஜ., எம்.பி.,

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (17)
Share
மும்பை : சிவசேனாவில் மொத்தமுள்ள 56 எம்.எல்.ஏ.,க்களில் 35 பேர் அதிருப்தியில் உள்ளதாக பா.ஜ., எம்.பி., நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு செயல்படாத அரசாக உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி., ஆகியவை நீண்ட நாட்கள் எடுத்து கொண்டன. பா.ஜ., மீண்டும், மாநிலத்தில் ஆட்சிக்கு வரும்.

இந்த செய்தியை கேட்க

மும்பை : சிவசேனாவில் மொத்தமுள்ள 56 எம்.எல்.ஏ.,க்களில் 35 பேர் அதிருப்தியில் உள்ளதாக பா.ஜ., எம்.பி., நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.



latest tamil news


மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு செயல்படாத அரசாக உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி., ஆகியவை நீண்ட நாட்கள் எடுத்து கொண்டன. பா.ஜ., மீண்டும், மாநிலத்தில் ஆட்சிக்கு வரும். பா.ஜ.,வுக்கு 105 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சிவசேனாவிற்கு 56 எம்.எல்.ஏ.,க்களே உள்ளனர். அவர்களில் 35 பேர் அதிருப்தியில் உள்ளனர்.


latest tamil news



மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற உத்தவ் அரசின் வாக்குறுதி, வெற்று வாக்குறுதி. எப்போது நிறைவேற்றப்படும் என்ற காலக்கெடு அளிக்கப்படவில்லை. அவுரங்காபாத் பகுதிக்கு வந்து சென்ற முதல்வர் உத்தவ் தாக்கரே, அந்த பகுதிக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. எந்த நிதியும் அளிக்கவில்லை. அவர்களுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை. ஆட்சி அமைக்கவே 5 வாரங்கள் எடுத்து கொண்டனர். அப்படி இருக்கையில், அவர்களிடம் ஆட்சியை நடத்துவார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும். இவ்வாறு நாராயண் ரானே கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X