பொது செய்தி

இந்தியா

நான் டைவ் அடிச்சுருக்கணும்: மனம் திறந்த தோனி

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020
Share
Advertisement
MSDhoni,WorldCup,run_out,Dhoni,தோனி,உலககோப்பை,ரன்அவுட்

புதுடில்லி: உலக கோப்பை அரையிறுதியில் தோனியின் ரன்அவுட், இந்தியாவின் கோப்பை கனவை கானல் நீராக்கியது. இதுவரை இதுகுறித்து மவுனம் காத்த தோனி, 'அந்த இரண்டு இன்ச் தூரத்தை டைவ் அடித்திருக்க வேண்டும் என எனக்குள்ளே கேட்டுக் கொண்டே இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நியூசி., அணியிடம் 18 ரன்கள் வித்தியாத்தில், இந்திய அணி தோல்வி அடைந்தது. டாப் ஆர்டர் சொதப்ப, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த தோனி, வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். கடைசி கட்டத்தில், ஜடேஜா அவுட் ஆக, தோனியின் தோளில் முழு சுமையும் விழுந்தது. அதற்கு ஏற்றாற்போல, 49 ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி, 3வது பந்தில் இரண்டு ரன்னுக்காக ஓடிய போது, குப்தில் துல்லிய த்ரோவில், ரன் அவுட் ஆனார். 240 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


latest tamil news



இதுநாள் வரை மீடியா வெளிச்சம் படாமல், ராணுவம், குடும்பம் என நேரம் செலவிட்டு வந்தார் தோனி. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், டைவ் அடித்திருந்தால் ரன் அவுட்டிலிருந்து தப்பித்திருக்கலாம் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் அளித்த பேட்டியில், 'அந்த இரண்டு இன்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும். இதனை எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் அவுட் ஆனேன். நியூசி., அணியுடனான அரையிறுதியிலும் ரன் அவுட் ஆனேன்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news



சமீபத்தில் பேட்டி அளித்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , 'ஒருநாள் போட்டிகளிலிருந்து தோனி விரைவில் ஓய்வு பெறலாம். 'டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட அவர் விரும்பலாம். ஐ.பி.எல்., போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டால், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பையில் (அக். 18- நவ. 15) விளையாட வாய்ப்புள்ளது' என தெரிவித்திருந்தார்.

ஒருவேளை தோனி, 'டுவென்டி-20' போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு எடுத்தால், நியூசி., அணிக்கு எதிரான உலககோப்பை அரையிறுதி போட்டியே, அவரது கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும். ஐ.பி.எல்., போட்டிகளில் தன்னை நிரூபித்து, உலக கோப்பை 'டுவென்டி-20' அணியில் இடம் பெற்று, அத்துடன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X