ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஆர்வம் இல்லை: தேவகவுடா

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

பெங்களூரு : 'ராஜ்யசபா எம்.பி., பதவி மேல் எனக்கு ஆர்வமில்லை. எங்கள் கட்சியை கட்டமைத்து பலப்படுத்த வேண்டும்' என ம.ஜ.த., தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்தார்.latest tamil newsகர்நாடக மாநிலத்தின் ம.ஜ.த., தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, தும்குரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அங்கு பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் வெற்றி பெற்றார். காங்., ஆதரவுடன் தேவகவுடா ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு அதில் ஆர்வம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇதுகுறித்து தேவகவுடா பேசுகையில், 'ராஜ்யசபாவில் போட்டியிடுவதில்எனக்கு ஆர்வமில்லை. எங்கள் கட்சியை கட்டமைத்து பலப்படுத்த வேண்டும். இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முன்பே கூறியிருந்தேன்' எனக் கூறினார்.


latest tamil newsஇது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தன்வீர் அகமது உல்லா கூறுகையில், தேர்தலில் போட்டியிட தேவ கவுடாவிடம் கோரிக்கை விடுத்தேன். கூடுதல் ஓட்டுகளைப் பெறுவது, அவருக்கு ஒரு சவாலாக இருக்காது. அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரை மதிக்கிறார்கள். கர்நாடகாவுக்கு மையத்தில் ஒரு வலுவான குரல் தேவை. இவ்வாறு பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
13-ஜன-202013:52:34 IST Report Abuse
RajanRajan ஏனப்பா நல்லா தூங்கிற கும்பகர்ணனை போயி என்னமா தொல்லை பண்ணுறாங்க. வுடுங்கப்பா.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
13-ஜன-202013:18:03 IST Report Abuse
bal ஏன்னா அந்த பதவில உப்பு சப்பு இல்லை...தூங்க முடியாது...பிரதமர் பதவில இருந்ததால் தூங்க முடியும்...இந்த சீட் சின்னதா இருக்கும்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஜன-202017:09:48 IST Report Abuse
Malick Rajaமுதலில் அரசியல்வாதிகளுக்கும் ஓய்வு வயது 60.வைத்துவிட்டால் மட்டுமே பதவி வெறியை தனிக்கமுடியும் .. கட்சி பதவிகளில் 75.வரை மட்டுமே இருக்க முடியும் என்பதையும் சட்டமாக்கினால் மட்டுமே நாடு உருப்படும்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜன-202011:39:46 IST Report Abuse
Lion Drsekar மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் பென்சன், பாராளுமன்ற உறுப்பினர் பென்சன், முன்னாள் பிரதமர் பென்சன், "ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஆர்வம் இல்லை" இது வேறு, வேறு எவனுமே அந்த கட்டத்துக்குள் போகவே முடியாது அளவுக்கு குடும்ப கட்சிகளின் ஆதிக்கம், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
13-ஜன-202013:31:57 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்எது அதிக பென்சன் தொகையோ அதுதானே கொடுக்கப்பட வேண்டும் , இதனை பென்சன் எப்படி ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X