ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஆர்வம் இல்லை: தேவகவுடா| Dinamalar

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஆர்வம் இல்லை: தேவகவுடா

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (18)

பெங்களூரு : 'ராஜ்யசபா எம்.பி., பதவி மேல் எனக்கு ஆர்வமில்லை. எங்கள் கட்சியை கட்டமைத்து பலப்படுத்த வேண்டும்' என ம.ஜ.த., தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்தார்.






கர்நாடக மாநிலத்தின் ம.ஜ.த., தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, தும்குரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அங்கு பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் வெற்றி பெற்றார். காங்., ஆதரவுடன் தேவகவுடா ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு அதில் ஆர்வம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.





இதுகுறித்து தேவகவுடா பேசுகையில், 'ராஜ்யசபாவில் போட்டியிடுவதில்எனக்கு ஆர்வமில்லை. எங்கள் கட்சியை கட்டமைத்து பலப்படுத்த வேண்டும். இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முன்பே கூறியிருந்தேன்' எனக் கூறினார்.





இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தன்வீர் அகமது உல்லா கூறுகையில், தேர்தலில் போட்டியிட தேவ கவுடாவிடம் கோரிக்கை விடுத்தேன். கூடுதல் ஓட்டுகளைப் பெறுவது, அவருக்கு ஒரு சவாலாக இருக்காது. அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரை மதிக்கிறார்கள். கர்நாடகாவுக்கு மையத்தில் ஒரு வலுவான குரல் தேவை. இவ்வாறு பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X