அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் உதவியுடன் கலவரம்: உதயநிதி கண்டுபிடிப்பு

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (107)
Advertisement
DMK,JNU,Udhay,MKStalin,Stalin,திமுக,உதயநிதி,ஸ்டாலின்,ஜேஎன்யூ

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் (ஜே.என்.யூ.,) மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், போலீசாரின் உதவியோடு நடந்தது என திமுக இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

டில்லி ஜே.என்.யூ.,வில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடந்த வாரம், மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் சங்க தலைவி கோஷ் உள்ளிட்ட சில மாணவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி, டில்லி ஜே.என்.யூ.,வில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்தார். தாக்குதல் நடந்த இடங்களையும் அவர் பார்வையிட்டார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜே.என்.யூ., மாணவர்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் போலீசாரின் துணையுடன் தான் நடத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு, தி.மு.க., துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.


டுவிட்டர் பதிவு:


மேலும் அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தாக்குதலுக்குள்ளான டில்லி ஜே.என்.யூ., மாணவர்களைச் சந்தித்தேன். கல்விக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 78 நாள்களுக்கு மேல் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் திசை திருப்பவே, இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் வந்த குண்டர்கள், சபர்மதி விடுதிக்குள் புகுந்து நடத்திய தாக்குதலை ஒவ்வொரு அறையாக அழைத்துச்சென்று மாணவர்கள் விவரித்தனர்.

இந்தநிமிடம்வரை, தாக்குதலுக்கு உள்ளானவர்களைத் துணைவேந்தர் சந்திக்கவே இல்லை என்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள் யாரெனத் தெரிந்தும் இதுவரை எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்யப்படவில்லை. குண்டர்களைப் பாதுகாப்பவர்கள், நாட்டை எப்படிப் பாதுகாப்பர் என நினைக்கையில் அச்சமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
18-ஜன-202021:53:01 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இடது கையில் கட்டு போட்டிருக்கும் அந்த பெண் போராளி வேறொரு படத்தில் வல கையில் கட்டு போட்டிருந்தார். உதயநிதி எந்த மொழியில் மாணவர்களுடன் உரையாடினார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன். ஹிந்தியில் பேசினார் என்றால் உ.பி க்கள் வெட்கப்படவேண்டும். உன்னை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202012:33:19 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் இன்றிலிருந்து துப்பறியும் "சாம்பு மவன்" என்று அன்போடு அழைக்கப்படுவாயாக
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
16-ஜன-202003:51:15 IST Report Abuse
Kunjumani சரி உங்கள் பாட்டன் ஒரு கல்லூரி மாணவனை கொன்று., அந்த மாணவனின் பெற்றோர்களை விட்டே அது என் மகன் இல்லை என்று கதறவிட்டது திமுக குண்டர்களின் உதவியினால், குண்டர்கள் இல்லாத நாங்கள் என்ன செய்வது அதான் போலீஸின் உதவி, நீ ஒன்றும் செய்ய வேண்டாம் உண்னை எவனுக்கும் அங்கு தெரியாது பேசாமல் வா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X