பொது செய்தி

இந்தியா

நிர்பயா வழக்கு: திகார் சிறையில் தூக்கு ஒத்திகை

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (9)
Advertisement
nibhayacase,dummyhang,DelhiRapeCase,convicts, நிர்பயா, வழக்கு, தூக்குஒத்திகை, திகார் ஜெயில், டில்லி

புதுடில்லி: '. நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கான தூக்கு ஒத்திகை, டில்லி திகார் சிறைச்சாலையில் இன்று(ஜன.,12) நடந்தது.

டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா. 2012, டிசம்பரில், ஓடும் பஸ்சில், ஆறு பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, சாலையில் வீசப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஆறு பேரும் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது. குற்றம் நடந்த போது, குற்றவாளிகளில் ஒருவரின் வயது, 18 வயதுக்கு குறைவாக இருந்ததால், அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மூன்றாண்டுகள் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள ஐந்து பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ராம் சிங் என்ற குற்றவாளி, டில்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், முகேஷ், 32, பவன் குப்தா, 25, வினய் சர்மா, 26, அக் ஷய் குமார் சிங், 31 ஆகிய நான்கு குற்றவாளிகள், டில்லி திஹார் சிறையில், உள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.






தூக்கு ஒத்திகை


ஆனால் குற்றவாளிகள் நான்கு பேருக்கும், வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்' என, டில்லி நீதிமன்றம் கடந்த ஜனவரி 7 ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில் திகார் ஜெயில் எண் 3ல் இவர்கள் நான்கு பேருக்கான தூக்கு ஒத்திகை இன்று (ஜன., 12) நடந்தது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் ஜன.22 காலை 7 மணிக்கு ஒன்றாக தூக்கிலிடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். தூக்குதண்டனையை உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஹேங் மேன் நிறைவேற்றுகிறார்.


மேல்முறையீட்டு மனு விசாரணை


தூக்குத் தண்டனை குற்றவாளிகளில் முகேஷ் குமார் மற்றும் வினய் ஷர்மா இருவரும் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் குறைதீர் மனுவை தாக்கல் செய்தல். இந்த மனு மீதான விசாரணை வரும் ஜன.,14 செவ்வாயன்று விசாரணைக்கு வருகிறது. அக்ஷய் குமார் மற்றும் பவன் குப்தா இருவரும் குறைதீர் மனு தாக்கல் செய்யவில்லை. குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள குறைதீர் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
13-ஜன-202022:04:23 IST Report Abuse
CHINTHATHIRAI Useless and incompetent people . Judiciary tem has to be monitored and rectified to save public money.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202017:10:11 IST Report Abuse
Endrum Indian இது ஆங்கிலேயர்கள் நமக்கு கற்றுக்கொடுத்தது???ஒரு தூக்குக்கு கூட ஒத்திகையா???அப்படி அவன் சாகவில்லையனெறால் இன்னொரு தடவை தூக்கு போட்டு அவன் சாகும் வரை செய்யுங்கள் இதற்கு போய் ஒத்திகை என்ன வேண்டிக்கிடக்கின்றது??/
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
13-ஜன-202020:56:02 IST Report Abuse
Nallavan Nallavanவிஞ்ஞான ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ இதற்கும் காரணம் இருக்கலாம் ........
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
13-ஜன-202013:41:28 IST Report Abuse
Ashanmugam தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது நிர்பயா வழக்கில் நிருபணமானது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X