ஒரு வேளை உணவுக்கு ரூ. 2.8 லட்சம் செலுத்திய நபர்; நெட்டிசன்கள் விமர்சனம்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (18)
Advertisement

பெங்களூரு : பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு நபர் இரவு உணவிற்காக 2.8 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். கடந்த ஆண்டில் உணவிற்காக செலவழிக்கப்பட்ட அதிக தொகை இதுவே. இது குறித்து நெட்டிசன்கள் அந்நபரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில், ஒரு நாள் உணவிற்காக ஒரு நபர் லட்சக் கணக்கில் செலவு செய்துள்ளார். நம்மில் பலரும் உணவு விடுதிகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ என எங்கு சென்றாலும் உணவுக்காக பணம் செலவு செய்வது இயல்பானது. ஆனால் இவர் ஒரு நாள் இரவு உணவிற்காக மட்டும் ரூ. 2,76,988 செலவு செய்துள்ளார். அவர் சிறந்த உணவு மற்றும் மது வகைகளை விரும்புபவர் என தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எந்த ஊரை சார்ந்தவர், யார் என்பது தெரியவில்லை.

கடந்த 2 ஆண்டுகளின் இந்தியாவின் மறுக்கமுடியாத உணவு நகரமாக பெங்களூரு மாறியுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் உணவிற்காக செலவழிக்கப்பட்ட அதிக தொகை கொண்ட உணவு பில் இதுவே என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நெட்டிசன்கள் அந்த நபரை கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்நபர் எங்காவது இன்ப சுற்றுலா சென்றிருக்கலாம் அல்லது ஆடம்பரமான கார் வாங்கி தனது ஓட்டுநரின் குடும்பத்திற்கு பரிசளிக்கலாம் அல்லது வேறு ஏதேனும் நல்ல செயல்களுக்கு செலவிட்டிருக்கலாம். இவ்வாறு நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202016:59:05 IST Report Abuse
Endrum Indian இரவு உணவு ரூ.2.8 லட்சம்??இது மதுவையும் சேர்த்து என்றால் அந்த மது மிகவும் பழமை வாய்ந்த மதுவாக இருப்பதினால் அதன் விலையே ரூ . 2 லட்சம் ஆகியிருக்கும். விலையை பாருங்கள் :Dalmore 62 Single Highland Malt Scotch (Matheson 1942) – $58,000 Glenfiddich 1937 – $71,700 The Macallan 1926 (Fine & Rare) – $75,000 The Macallan 1926 (Fine & Rare) – $75,000 . ... Springbank 1919 – $78,000 Glenfiddich Janet Sheed Roberts Reserve 1955 – $94,00 $78,000 Dalmore 64 Trinitas – $160,000 Dalmore 62 – $250,000 The Macallan 64 in Lalique Cire Perdue – $464,000 ஆகவே ரூ 2.8 லட்சம் ஒன்றுமே இல்லை இதன் (விஸ்கியின்)எதிரில்
Rate this:
Share this comment
Cancel
sambantham sasikumar - chennai,இந்தியா
13-ஜன-202012:57:30 IST Report Abuse
sambantham sasikumar ஐந்து ரூபா வாழைப்பழத்தை ஐநூறு + GST. னு போட்டு பில்லு கொடுத்த ஹோட்டல் எல்லாம் பார்த்துஇருக்கோம். சென்னை நுங்கம்பாக்கத்தில் தி பார்க் னு ஓர் நட்சத்திர ஹோட்டல் இருக்கு, அவன் ரோட்டுல கார்பார்க்கிங், பார்க்குனு சுமார் 500, சதுராடி ரோட்டை ஆக்கிரமிச்சி கட்டியிருக்கான், கோர்ட் அதை இடிக்கச்சொல்லி உத்தரவுபோட்டது, ஒருநாள் கார்பொரேஷன் ஒருமீட்டர் தூரத்துக்கு இடிச்சி போட்டோ எடுத்துகிட்டான். இப்போ இடிச்ச எடத்துல சிமெண்ட் போட்டு பூந்தொட்டி வச்சிட்டான். .... அதிகாரிகள் இருக்கும் வரை நமக்கு இது எல்லாம் ஒரு செய்திதான்
Rate this:
Share this comment
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
13-ஜன-202012:08:35 IST Report Abuse
R Ravikumar பணம் பணத்தை சேர்ந்தது .. ஒரு பணக்காரன் ஒரு பணக்கார ஹோட்டலில் விலை அதிகமுள்ள ? உணவை சாப்பிட்டு இருக்கிறான் . இடது சாரி சிந்தனை இங்கு வேண்டாம் . இது தனி மனித எளிமை , சமூக அக்கறை சம்பந்தப்பட்டது . இந்த செய்தியை புறம் தள்ளுங்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X