பா.ஜ., தேசிய தலைவராகிறார் நட்டா; ஜன.,20ல் பொறுப்பேற்பு?

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (11)
Advertisement
BJP,BharatiyaJanataParty,JPNadda,Nadda,BJP_national_president, பாஜ,நட்டா,பாஜ_தேசிய_தலைவர்,பாஜக

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜன.,20ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

பா.ஜ., தேசிய தலைவராக உள்ள அமித்ஷா, கடந்த 4 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு(2019) துவக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும் லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் முடியும் வரை அவரே தலைவராக இருக்கும்படி கேட்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. இந்நிலையில், பா.ஜ., புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பா.ஜ., செயல் தலைவராக உள்ள அவர், ஜன.,20ல் பா.ஜ., தலைவராக பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகிறது. அவரது பதவியேற்பு விழாவை சிறப்பாக நடத்தவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, தற்போதைய பா.ஜ., தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நட்டாவுக்கு தலைவர் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. டில்லியில் வரும் பிப்.,8ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜன-202020:00:14 IST Report Abuse
Sampath Kumar நட்டா நல்ல பெயரு பத்துங்கோங்க நோட்டாவுக்கு கீலே போகாம
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஜன-202016:04:27 IST Report Abuse
இந்தியன் kumar பாஜக குடும்ப கட்சி அல்ல திறமை இருந்தால் தலைவர் ஆகலாம்.
Rate this:
Share this comment
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
13-ஜன-202009:00:40 IST Report Abuse
VENKATASUBRAMANIAN In BJP any one become leader of the party based on the hard work. But in DMK and Congress family members only become leader and otger important portfolio. Example Stalin, Udayanithi, Ksnimozhi, Dayanithi etc. In congress Infira, Rajive, Sonia, Rahul , Priyanka, etc. This is called securalism in their record. Simply cheating people.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X