தமிழ்நாடு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை! விவசாயிகளுக்கு இழப்பு குறைய

Added : ஜன 12, 2020
Advertisement
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க  கோரிக்கை! விவசாயிகளுக்கு இழப்பு குறைய

வாய்ப்புகம்மாபுரம்: குறுவை சாகுபடியில் வெளி மார்க்கெட்டில், நெல் விலை குறைவாக இருந்ததால், சம்பா அறுவடைக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் சம்பா பட்டத்தில், டெல்டா மற்றும் போர்வெல் பாசனத்தின் மூலம் 2 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், கம்மாபுரம், விருத்தாசலம் பகுதிகளில் பி.பி.டி., பொன்னி, கோ.ஆர்-50, கோ-43, பொன்மணி, உள்ளிட்ட பல வகை நெல் ரகங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. டெல்டா அல்லாத பகுதிகளான கம்மாபுரம், விருத்தாசலம், வடலுார், கடலுார் பகுதிகளில் போர்வெல் பாசனத்தின் மூலம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கம்மாபுரம் பகுதியில் நெல், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. முன் பருவத்தில் பயிர் செய்த சில விவசாயிகள் அறுவடையை துவக்கி விட்டனர்.மார்க்கெட் கமிட்டி மற்றும் வெளி மார்க்கெட்டில் கடந்த குறுவை அறுவடையின் போது, நெல் விலை மிகவும் குறைவாக இருந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.இதனால், சம்பா அறுவடைக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட்டால், வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்குவர்.இதனை கருத்தில் கொண்டு கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, திட்டக்குடி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்: 'கடந்தாண்டு, சொர்ப்ப இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டன. நடப்பாண்டு, அறுவடை துவங்க உள்ளதால், தற்போதே கொள்முதல் நிலையங்கள் அமையும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டால், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இதுபோல், பிற பாசன பகுதியிலும் முன்னதாகவே நீர் திறக்கப்பட்டதால், நெல் அறுவடை அடுத்தடுத்து துவங்கும். அறுவடை முடிந்து நேரடியாக கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றால், விவசாயிகளுக்கு சிரமம் குறையும். உடனுக்குடன் கொள்முதல் செய்தால், இழப்பு குறைவாக இருக்கும்.போதிய அளவில் கொள்முதல் நிலையங்கள் திறக்காவிட்டால், விவசாயிகள் நெல்லை அடிமாட்டு விலைக்கு, தனியாரிடம் விற்கும் நிலை ஏற்படும். இதைத் தடுக்க, மாவட்டத்திலுள்ள 683 ஊராட்சிகளில் குறைந்தது 70 இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X