பொது செய்தி

தமிழ்நாடு

சதுரங்க போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கடலுார்; சதுரங்க போட்டியில் வென்ற மாணவிகளை ஓ.பி.ஆர்., கல்வி நிறுவன தாளாளர் செல்வராஜ் பாராட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில், சேந்தநாடு, திருநாவலுார், புக்கிரவாரி, பெரிய சிறுவத்துார் ஆகிய ஊர்களில் சதுரங்க போட்டிகள் நடந்தது. வடலுார் சுத்த சன்மார்க்க நிலையம், மழவந்தாங்கல் கஸ்துார்பா காந்தி தொழு நோய் நிவாரண நிலையத்தின் மேற்பார்வையில் நடந்த போட்டியில், கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலா பள்ளி மாணவிகள் 210 பேர் கலந்து கொண்டனர். 11 வயது பிரிவில் சேந்தநாடு மாணவி சுவாதி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா, வடலுார் வள்ளலார் குருகுலம் பள்ளியில் நடந்தது. ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கி, 40 மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபால், மாவட்ட சதுரங்க தலைவர் ரவிச்சந்திரன், துணை தலைவர் திருமலைக்குமார், ஆசிரியர்கள் குணசேகரன், செந்தில்குமார், ஓ.பி.ஆர்., செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சண்முகவடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X