பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து வியாபாரிகள் சங்க துவக்க விழா

Added : ஜன 12, 2020
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க துவக்க விழா நடந்தது.தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில பொதுச்செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். ஸ்ரீமுஷ்ணம் சங்க தலைவர் வடமலை வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், 'தற்போதுள்ள மத்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடின்றி அனுமதி வழங்கியதால் தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி, மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கதவை திறந்து விட்டது காங்., தற்போதுள்ள பா.ஜ., அரசு கதவுகளே வேண்டாம் என்று, அனைத்து கதவுகளையும் கழற்றி வைத்துவிட்டது.நம் நாட்டு விவசாயத்தையும் வெளிநாட்டு நிறுவனங்கள் கைப்பற்ற நினைக்கிறது. சில்லரை வர்த்தகம், சுயதொழில், விவசாயம் இந்த மூன்றையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாது. உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டுமே வாங்கி வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும். இதனால் வெளிநாட்டு கம்பெனிகளின் ஆதிக்கத்தை குறைக்க முடியும்.வியாபாரிகள் சாதி, மத, அரசியல் சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் நிலம் மலட்டுத்தன்மை உடையதாக மாறுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை உண்ணும் போது மனிதர்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது' என்றார்.நகர செயலர் ராமமூர்த்தி, பொருளாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X