பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்பு அறுவடை

Added : ஜன 12, 2020
Advertisement

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சுற்று பகுதியில் விளைந்துள்ள பன்னீர் கரும்புகள் அறுவடை நடந்து வருகிறது.

கடலுார் மாவட்டத்தில் பத்திரக்கோட்டை, சத்திரம், கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வெங்கடாம்பேட்டை, வல்லம்படுகை, சிவநந்திபுரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் அதிகமாக பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஓராண்டு பயிரான பன்னீர் கரும்பு அறுவடை நடந்து வருகிறது.கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா என சந்தேகத்துடனே ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். அரசு பொங்கல் பரிசு பொருட்களுடன் இரண்டு அடி கரும்பும் வழங்கி வருகிறது. இதனால் பயிரிடப்பட்ட கரும்புகள் அனைத்தும் விற்று வருகிறது.மேலும், குஜராத்,புதுச்சேரி,விஜயவாடா மற்றும் விழுப்புரம், கடலுார் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட கரும்புகள் நன்கு விளைந்துள்ளது.20 கரும்புகள் உள்ள ஒரு கட்டு தற்போது ரூ. 250 முதல் 300 வரை விற்பனையாகிறது. கடந்த 5 ஆண்டுகளாக விலை அப்படியே தான் உள்ளது.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் வியாபாரிகள் கரும்புகளை வாங்கி செல்கின்றனர். இதனால் பத்திரக்கோட்டை மற்றும் சுற்று பகுதிகளில் கரும்பு வியாபாரிகள் வரவு அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X