சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

விஸ்வரூபம் எடுக்கும் நகை மோசடி விவகாரம்!

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (5)
Advertisement
 விஸ்வரூபம் எடுக்கும் நகை மோசடி விவகாரம்!

''போலி நகை மோசடி விவகாரம், விஸ்வரூபம் எடுக்க போகுதாம் பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''சென்னையில இருக்கற, வெள்ளாளர் தேனாம்பேட்டை கூட்டுறவு சங்க கடன் சங்கத்துல, மூணு ஆண்டுக்கு முன், ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகி ஒருத்தரு, தலைவராக இருந்தாரு...

''அப்போ, 1 கோடி ரூபாய்க்கு, நகை கடன் கொடுத்துருக்காங்க... அவருக்கு அப்புறம் பொறுப்புல இருந்தவரு, 6 லட்சம் ரூபாய்க்கு நகை கடன் கொடுத்துருக்காரு பா...

''சங்க நிர்வாகி ஒருவரு, அடகு நகை விபரங்களை பரிசோதித்த போது, அதுக்கு, உரிய ஆவணங்கள் இல்லையாம்... அது, போலி நகையாக இருக்குமோன்னு, சந்தேகம் ஏற்பட்டிருக்கு... இதுக்கிடையில, நகை மதிப்பீட்டாளரும் தலைமறைவாகிட்டாரு பா...

''நகை மோசடி நடந்திருக்கான்னு, சி.பி.சி.ஐ.டி., விசாரணை கோரி, நீதிமன்ற உதவியை நாட, சங்க உறுப்பினர்கள் முடிவு செஞ்சுருக்காங்க பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.

''ரஜினி நடிச்ச படத்தை வாங்குற அளவுக்கு, 'செழிப்பா' இருக்காருங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.
''என்ன வே... சொல்லுறீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தர்பார் படத்தின், திருச்சி மண்டல வினியோக உரிமையை, 8.5 கோடி ரூபாய்க்கு, ஆளுங்கட்சி பிரமுகரோட தம்பி வாங்கியிருக்காருங்க... 'மிடில் கிளாஸ்' குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு, திடீருன்னு இவ்வளவு பணம் எப்படி வந்துச்சுன்னு, திருச்சி மக்கள் மிரண்டு போயிருக்காங்க...

''ஆளுங்கட்சியோட உச்ச பதவி வகிக்கிறவர் பணம் கொடுத்தாருன்னு சொல்லி, கேட்குறவங்க வாயை அடைக்கிறாராம்... அவருக்கிட்ட இதை கேட்க முடியுமான்னு, ஆளுங்கட்சிக்காரங்க, அமைதியா இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''எவ்வளவு கொடுக்கலாமுன்னு யோசிக்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''என்ன, ஏதுன்னு விளக்கமா சொல்லு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தி.மு.க., தலைவர் கருணாநிதி, உயிரோடு இருந்தப்போ, பொங்கல் அன்னைக்கு, அவரோட குடும்பத்தினர், கட்சியினர், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு போய், வாழ்த்து வாங்குவா ஓய்...

''அவாளுக்கு, கருணாநிதி, புதிய, 10 ரூபாய் நோட்டை கொடுப்பார்... பின், கட்சியினர், ஆழ்வார்பேட்டையில இருக்கற, ஸ்டாலின் வீட்டுக்கு போவா... அவரு, புதிய, 20 ரூபாய் நோட்டு கொடுப்பார் ஓய்...
''கருணாநிதி மறைவால், போன பொங்கலுக்கு, ஸ்டாலினை, முக்கிய நிர்வாகிகள் மட்டும் சந்திச்சு, 20 ரூபாய் வாங்கினா... அடுத்த வருஷம், சட்டசபை தேர்தல் வர்றது...
''அதனால, பொங்கலுக்கு, கருணாநிதி நினைவிடத்துல, ஸ்டாலின் கையால, கட்சியினருக்கு, 10 ரூபாய் தரலாமானு யோசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''கருணாநிதியோட பதவிக்கு வந்தாச்சு... அதனால், 20 ரூபாய் கொடுக்கலாமுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
13-ஜன-202019:44:00 IST Report Abuse
karutthu ஜாதி வித்தியாசம் பார்க்காமல் கொடுப்பீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13-ஜன-202014:51:43 IST Report Abuse
Anantharaman Srinivasan மேலிடத்து சமாச்சாரம் எல்லாமே பினாமி ஆட்டம்தான். வருமானவரித்துறை ஆட்டம் குளோஸ் ஆனபின் ஆஜராகும்.
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
13-ஜன-202010:47:52 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தயிர் வடை சாம்பார் வடை அதிரசம் எல்லாம் உண்டா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X