பொது செய்தி

தமிழ்நாடு

நல்லுார் தி.மு.க., கவுன்சிலர்கள் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை

Added : ஜன 12, 2020
Advertisement

வேப்பூர்: நல்லூர் ஒன்றிய தி.மு.க., கவுன்சிலர்கள், நிர்வாகிகள் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நல்லூர் ஒன்றிய சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில், தி.மு.க., சார்பில் 11 கவுன்சிலர்களும், அ.தி.மு.க., சார்பில் 10 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். தி.மு.க., பெரும்பான்மைக்கு தேவையான கவுன்சிலர்களுடன் வந்ததால், சேர்மன் பதவியை கைப்பற்றும் சூழல் நிலவியது.ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர், உடல் நலக்குறைவால் மருத்துவ விடுப்பில் சென்றதாக கூறி, தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தி.மு.க., ஆதரவு 11 கவுன்சிலர்கள், நல்லுார் ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, நிர்வாகிகள் மோகன்ராஜ், நகர் பாபு உள்ளிட்டோர் நேற்று தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். சேர்மன் தேர்தல் நடைபெறும் வரை நிர்வாகிகள் செயல்பாடு, கவுன்சிலர்களின் பாதுகாப்பு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X