பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஆர்வமில்லை

Added : ஜன 12, 2020
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நகராட்சி அதிகாரிகளிடம் ஆர்வமில்லாததால், சப் கலெக்டரின் ஆய்வுக்கு பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு, கடைவீதி, தென்கோட்டை வீதி, சன்னதி வீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.இதனால் பொது மக்கள், பாதசாரிகள் நடந்து செல்ல மிகுந்த சிரமமடைந்தனர். நடைபாதையை வியாபாரிகளை ஆக்கிரமித்ததால் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்தது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.அதைத்தொடர்ந்து, சப் கலெக்டர் பிரவீன்குமார், கடந்த இரண்டு நாட்களாக நேரில் களமிறங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதற்காக, பிற்பகல் 12:00 மணிக்கு மேலாகியும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றும் வரை அங்கேயே இருந்தார்.அப்போது, விதிமுறை மீறிய நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம்விதித்ததால், ஆக்கிரமிப்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.இப்பகுதியில் தினசரி இருமுறை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் தொடராத நிலையை உறுதி செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு சப் கலெக்டர் உத்தரவிட்டார்.ஆனால், அதிகாரிகளிடம் ஆர்வமில்லாத காரணத்தால், ஆக்கிரமிப்பு அகற்றிய பின், அந்த இடங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளன.சப் கலெக்டர் நேரடியாக களமிறங்கியும், நகராட்சி அதிகாரிகளிடம் ஆர்வமில்லாமல், ஆக்கிரமிப்பை அகற்ற முடியாதது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X