பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பழ நோய் மேலாண்மை முறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் யோசனை

Added : ஜன 12, 2020
Advertisement

விருத்தாசலம்: நெல்லில் மஞ்சள் கரிப்பூட்டை அல்லது நெற்பழ நோய் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அறிவிய நிலையம் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோயியல்துறை விஞ்ஞானி மருதாச்சலம் ஆகியோரது செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், சில இடங்களில் மஞ்சள் கரிப்பூட்டை அல்லது நெற்பழ நோய் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நோயில் இருந்து பயிர்களை காப்பாற்ற கீழ்கண்ட ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும்.மஞ்சள் கரிப்பூட்டை அல்லது நெற்பழம் என்பது பூசணத்தினால் உண்டாகும் ஒரு நோய். குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதிகளவு காணப்படும். தாக்கப்பட்ட பயிரில் ஒவ்வொரு தனி தானியமும் ஆரம்பத்தில் மென்பட்டு துணி போன்ற தோற்றத்துடன் மஞ்சள் நிற நெற்பழ உருண்டைகளாகவும், பிறகு ஆரஞ்சு நிறத்திற்கு மாறி, கடைசியாக கருப்பு நிற நெற்பழ உருண்டைகளாக காணப்படும்.முதலில் இந்த உருண்டைகள் சிறியதாக தோன்றி, பிறகு பெரியதாகும். ஒரு கதிரில் சில மணிகள் மட்டுமே பாதிக்கப்படும். மற்ற மணிகள் அனைத்தும் நல்லதாக இருக்கும். இந்நோயினால் நெல் மணிகளின் தரம் குறைந்து விடும். இதனால் கரிப்பூட்டை நோய் தாக்கப்பட்ட வயல்களில் இருந்து எடுக்கப்பட்ட மணிகளை விதைக்காக உபயோகிக்கக் கூடாது.பரவும் விதம்பனிப்பொழிவுடன் கூடிய குளிர்ச்சியான சீதோஷ்ணம், அதிக ஈரப்பதம் (90 சதம்), அதிக தழைச்சத்து மண்ணில் இடுதல் மற்றும் காற்றுடன் கூடிய மழை ஆகியவை இழை முடிச்சுகள் மற்றும் இழை வித்துக்கள் பெருகி பரவ உதவுகின்றன. பூசண வித்துக்கள், சேமிப்பு நெல் விதைகள் மற்றும் காற்று மூலம் பரவுகிறது.மேலாண்மை முறைகள்நல்ல தரமான நோயற்ற விதைகளை உபயோகப்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடக்கூடாது. விதைக்கும் முன் ஒரு கிலோ விதைக்கு கார்பண்டசிம் 2 கிராம் அல்லது லிட்டர் என்ற அளவில் 5-6 மணி நேரம் ஊறவைத்து (ஈர விதைநேர்த்தி) நாற்றாங்காலில் இடவேண்டும். நடவு வயலில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50 டபிள்யு.பி., 2.5 கிராம், லிட்டர் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபிள்யு.பி., 2.5 கிராம், லிட்டர் அல்லது புரோபிகோனசோல் 1.0 மி.லி., லிட்டர் போன்ற பூசணக் கொல்லிகளை பூட்டை பருவத்தில் ஒரு முறையும், 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் இரண்டாவது முறையும் தெளிப்பதால் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X