சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பதவிக்காக நடக்கும் கலவரம்!

Added : ஜன 12, 2020
Advertisement
 பதவிக்காக நடக்கும் கலவரம்!

'இன்னும் தேர்தலே நடக்கவில்லை. அதற்குள், பதவியை பிடிக்க இவ்வளவு அடிதடியா' என, டில்லி மாநில, பா.ஜ.,வில் நடக்கும் கூத்தை நினைத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் டில்லியில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், முதல்வர் கெஜ்ரிவாலும், அவரது கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 'இந்த முறை ஆட்சியை எப்படியாவது பிடித்து விட வேண்டும்' என்ற முடிவுடன், பா.ஜ., வினரும், காங்கிரசாரும் களத்தில் உள்ளனர்.

பா.ஜ., மத்தியில் ஆட்சியில் இருப்பதால், அந்த கட்சியினர் கூடுதல் உற்சாகத்துடன் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், 'தேர்தலில் வெற்றி பெற்றால், முதல்வராக பதவியேற்பது யார்' என்பதில், அந்த கட்சிக்குள் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. மனோஜ் திவாரி, விஜய் கோயல், ஹர்ஷ் வர்தன், பர்வேஷ் வர்மா ஆகியோர், இப்போதே முதல்வர் கனவில் மிதக்கின்றனர். இதில், ஹர்ஷ் வர்தன் மத்திய அமைச்சராக இருப்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி, முதல்வராகி விடலாம் என, முட்டி மோதுகிறார்.

அவருக்கு, டில்லி மாநில, பா.ஜ., தலைவரான மனோஜ் திவாரி, கடும் போட்டியாக உள்ளார். கட்சி மேலிட தலைவர்களோ, 'இவர்களுக்குள் நடக்கும் கலவரத்தால், கட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடும் போலிருக்கிறதே' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X